பாக்கதுக்கும் படிக்கதுக்கும்
பகட்டாகத் தானிருக்கு
பதில் எழுதப் போனாக்க
பசுந்தமிழே தெரியலே
இருவருமாச் சேந்துவந்து
இதப்போட்டு அதப்போட்டு
வேர்த்து விருவிருத்து
விசயொண்ணக் கண்டுபிடிச்சு
இதமா அமுக்கிப்பிட்டு
எதவாப் பாத்தாக்க.....
நுழைக நுழைக இன்னு
நூறுதரம் வருது அதுல!
எதுல ‘நுழையிரது?
எப்பிடித்தமிழ் எழுதுறது?!
கண்ணக்கட்டிக் காட்டுக்குள்ள
விட்டகதை இதுதானோ!?
{அப்பா சொல்வது காதில் கேட்கிறது}
நுழைக நுழைகவில நுழைஞ்சு கற்றுவர
அ னாவைக் கற்பிக்க அன்னைபட்ட பாட்டைவிட
க னாவைக்{கணினியை}கற்பிக்க{அன்னைக்கு}
கண்மணிகள் வெகுபாடு.
இது நான் புதுயுகப்புத்தகம் கற்றுக்கொண்ட கதை!
10 comments:
ஹாஹாஹா அருமை..:))
ப்ரமாதம் . . . !
அ னாவை, க னாவை, புதுயுகப்புத்தகம், ஆகியவை! அசத்தீடீங்க ஆச்சி!தம்பி ராமு
அம்மா வாங்க என்று குழந்தைகள் கை பிடித்து அழைத்து வர , நீங்கள் எழுதிய முதல் கவிதை .... அழகு!
வாழ்த்துக்கள்!
ரசித்தேன் நீங்கள் பட்ட பாடினை:))!
புதுயுகப் புத்தகம் சீக்கிரம் வசப்படும்!
வாழ்த்துக்கள்!!!!
அருமை..வாழ்த்துக்கள்!
அசத்தலா இருக்கு!! இப்பத்தான் புரியுது தேனக்கா எப்படி தேனாகக் கவிதை வடிக்கிறாங்கன்னு!! புலிக்குப் பிறந்தது... அம்மான்னா சும்மாவா!!
ஆனா ஒண்ணு, தேனக்கா கவிதைகளைவிட உங்க கவிதைகள்தான் தெளிவாப் புரியுது எனக்கு!!
வரவேற்று வணங்குகிறேன்
super amma!
Post a Comment