Friday, July 19, 2024

பெண்வீட்டு நடைமுறைகள்

திருமணத்தின் முதல்நாள்

காலையிலேயே எடுத்துவைக்கவேண்டியவை

  

 பூரம் கழிப்பதற்கு ஐயரிடம் 

கேட்டு எழுதிவைத்து 

மறக்காமல் எடுத்துவைத்தல்


சடங்குத்தட்டில் சரியாக எடுத்துவைத்தல்

ஏழு கிண்ணங்களில் 


1)பிள்ளையார்

2)திருநீறு

3)விரலிமஞ்சள்

4)வெற்றிலைபாக்கு

5)பஞ்சு

6)உப்பு

7)பச்சரிசி

நிறைநாழியில்

நெல் எடுத்துவைத்து 

நடுவில் ஒருகத்தரிக்காய்

 வெள்ளியில் இருந்தாலும்வைக்கலாம்

குழவியும் அதற்கு உள்ளபட்டுத்துண்டும்

கைப்பெட்டியில் வைத்திருப்பதை வாங்கி  தயாராக வைத்தல்

 பால்பானை செம்பும் கெண்டிச்செம்பும் தயாராக வைத்தல்

தும்பு பிடிக்க கயிறு எடுத்துவைத்தல்

கொலமாவும் கொலம்போட 

வெள்ளைத்துணியும் மாவுகரைக்க 

கிண்ணங்கள் ஆறும் 

கோலச்சட்டம் இருந்தால் அதுவும்

எடுத்துவைத்தல்

கோலமாவு நேரம்கிடைக்கும்போது

பச்சரிசியில் ஆட்டி தட்டிக்காயவைத்து

எடுத்து வைத்தது.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்

காப்புக்கட்ட இரண்டு மஞ்சளும்

சிவப்புக் கலர் ரிப்பனும்

காலையில் மாப்பிள்ளை அழைப்பதற்கு

உள்ளவற்றை தாம்பாளத்தில்எடுத்துவைத்தல்

1)மாப்பிள்ளைக்கு உள்ள மாலை+பூச்செண்டு

2)நம்ம கோவிலில் இருந்து 

கோவில்மாலையுடன்வந்த

 திருநீறு குங்கும பிரசாதம்

3)விரலிமஞ்சள் 2

4)வெற்றிலை பாக்கு

5)எலுமிச்சம்பழம்2

6)மாப்பிள்ளைக்கு உள்ள

வேட்டி துண்டு

7)மாப்பிள்ளைக்கு அணியக்

கொடுக்கும் நகைகள்

(கைக்கெடியாரம்,கைச்சங்கிலி,

கழுத்துச் சங்கிலி,மோதிரம்

முதலியவை)

Wednesday, July 3, 2024

வள்ளுவப்பை

கழுத்திரு வாங்க பெண்வீட்டுக்கு

வயதான அனுபவமிக்க பெரியவர்கள் 

இரண்டுபேர் வள்ளுவப்பை கையில்


எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

வள்ளுவப்பையில், விரலிமஞ்சள் இரண்டு,

எலுமிச்சம்பழம் இரண்டு உப்புப்பொட்டலம்,








ஏடுக்கு உள்ளஎழுத்தாணி














குலம்வாழும் பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும்.














பெரியவர்களிடம் கேட்டு அவரவர் வழக்கப்படியும்

எடுத்துவைக்கலாம்.

மாப்பிள்ளை அழைப்பின்போதும் மாப்பிள்ளை 

வள்ளுவப்பையுடன் வரவேண்டும்

Sunday, June 23, 2024

வயது சாதனை 10

 

இவர் பெயர் இசக்கியாபிள்ளை

வயது தொண்ணூறு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 

வடக்கு அய்யனூர்

தெருவில் வசிக்கிறார்.

 காலை உணவகம் நடத்துகிறார்.

இவர்கடை இட்லி மிகவும் பிரபலம்.

இட்லி தேங்காய் சட்னி,மல்லி சட்னி

உ.வடை மட்டுமே!காத்திருந்துதான் சாப்பிடவேண்டும்.13வயதில் இந்த தொழிலுக்கு வந்தவர்.இன்றுவரை

உழைப்பையும் உணவு சுத்தத்தையும் மட்டுமே நம்புகிறார்.காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கடவுளை வணங்கி வீட்டிலிருந்து கடைக்கு ஒண்ணரை கிலோமீட்டர் நடந்தே வருகிறார்,உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாய்த்திகழ்கிறார்.இவர் ஒரு மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாளர்தான்.நெஞ்சை நிமிர்த்தி தலை வணங்குவோம் 

முதிய இளைஞர் இசக்கியா பிள்ளையை.தொடரட்டும் பணி

பெண்பார்க்கும் நிகழ்வுக்குமுன் அப்பத்தா சொல்லிக்கொடுத்தது

     அலமியாச்சிக்கு பேத்திக்கு சீக்கிரமா கலியாணம் பண்ணிப்பாக்க ஆசை.
பேத்திக்குப் படிப்புமுடிய இன்னும் ஒருவருசம் இருக்கே ஆத்தா
அதுக்குள்ள என்ன அவசரம் என்று மகன்சொல்ல,பேத்திக்கோ
தனது பொறியியல் படிப்பைமுடித்து கொஞ்சநாள் வேலைக்கும்
சென்றுவர ஆசை.
    இப்பவேபேச ஆரம்பிச்சாதான் அப்பச்சி படிப்புமுடிஞ்சதும்
செய்யத் தோதாகஇருக்கும் என்று அப்பத்தா சொன்னதும்பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்புக்கொடுக்கும்அந்தக்குடும்பத்தில் அப்பத்தா சொன்னதைக்கேட்டார்கள்.தெரிஞ்சவுகளிடம் சொல்லிவைத்தார்கள்.
   படிப்புமுடிய ஆறுமாதம் இருக்கும்போது நல்லபேச்சாக மாப்பிள்ளையும்
பொறியியலாளராக அரசாங்கவேலையிலிருப்பவராக நல்ல இடமாக அமைந்தது.நல்லநாள் பார்த்து பெண்பார்க்க வருவதாகச்சொல்லிவிட்டார்கள்.

     அலமிஆச்சிக்கு ரொம்ப மகிழ்ச்சி.மகன் சொக்கலிங்கத்தையும் மருமகள்
மீனாட்சியையும் கூப்பிட்டுப் பக்கத்தில்வைத்துக்கொண்டு மாப்பிள்ளைவீடு
வருவதற்குமுன்னால் தயார்செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிக்கொடுத்தார்கள்.
    மாப்பிள்ளை பெண்பார்க்க வருவதற்கு பலகாரங்கள் செய்வது நம்வீட்டில்
வழக்கமில்லை.அதனால் கடையில் சோன்பப்டியும் மிக்சரும் அதை வைத்துக்கொடுப்பதற்கு பிளேட்டுகளும்,காப்பி,பால் முதலானவைகளும்
மாப்பிள்ளை வீட்டிலிருந்து எத்தனபேர் வருகிறார்கள் என்றுகேட்டு அதற்குத்தகுந்தாற்போல ஏற்பாடுசெய்து முன்கூட்டியே வாங்கி
வைக்கச் சொன்னார்கள்

    பெண்னுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்து  நல்ல மனிதர்களாக அமைந்தால் அவர்கள் சொல்லிக்கொள்ளும்போது கொடுப்பதற்கு எவர்சில்வர்வாளி,பழங்கள்,ரொட்டிக்கட்டு முதலானவை வாங்கிவைக்கவேண்டுமென்றார்கள்.
மாபிள்ளைக்கு பெண்பார்த்ததற்கு நாம் பேசிக்கொள்ளும் முறைகளுக்கு
ஏற்றார்ப்போல ரூபாயுடன் வெற்றிலைபாக்கும் வகைப்பழம் அதாவது
வாழைப்பழம் ஒருசீப்புடன் சாத்துக்குடி அல்லது ஆப்பிள் ஆரஞ்சு
இவற்றில் ஏதாவது இரண்டுவைத்துக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
மாப்பிள்ளையின் தயார் தகப்பனார் இருவருக்கும் கொழுதனார் நாத்தனார்
இருந்தால் அவர்களுக்கும் அதுபோல் பழம்வைத்து மாப்பிள்ளைக்கு
வைத்ததுபோல[அதாவது மாப்பிள்ளைக்கு ரூ- 501/என்றால் மப்பிள்ளையின்
அப்பா+அம்மாவுக்கு-201+201ம் கொழுதனார் நாத்தனார்க்கு-ரூ-101+101ம்]
வைத்துக்கொடுப்பது என்றுமுடிவுசெய்து எல்லாம் எடுத்துவைத்தார்கள்
பெண்பார்க்க நம்வீட்டுக்கு வருபவர்களை 
சும்மா அனுப்பக்கூடாது மரியதைக்காக செய்வது
அவரவர் வழக்கப்படி துகை[ரூபாய்] வைக்கலாம்.

https://muthusabarathinam.blogspot.com/2024/02/blog-post.html

கோட்டை கட்டுதல்

 கல்யாணத்துக்கு முதல்நாள் நல்லநேரத்தில்

கோட்டை கட்டவேண்டும்

முன்பே சொல்லிவைத்து வைக்கோல் 

வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

நெல் பெரியபடிக்கு ஒருபடி எடுத்துவைக்கவேண்டும்.

ஒருபடி நெல் கொள்ளும் அளவைவிட கொஞ்சம் பெரிதாக 

ஒரு மஞ்சள்பை இருந்தால் எடுத்துவைக்கவும்.

அப்பதான் பையைக்கட்டி முடிய வசதியாஇருக்கும்

சமையல் மேஸ்திரியிடம் சொன்னால் ராசியான 

கோட்டைகட்டத்தெரிந்த ஆளாக வந்து

கட்டித்தரச் சொல்லுவார்.வைக்கோலை

நன்கு திரித்துக்கட்டுவார்.அதற்கு நாம் பணம் தரவேண்டும்.

முன்னூறு அல்லது ஐநூறு கேப்பார்.

மாப்பிள்ளை அழைப்பின்போது கோட்டையையும்

மறக்காமல் கூடவே ஒருஆளை எடுத்துவரச்செய்யவேண்டும்.


Friday, June 21, 2024

வயது சாதனை 9


 






















தினமலர் வாரமலரில்(6/09/2024)
வெளிவந்தது

Thursday, June 20, 2024

முளைப்பாரி

 நல்லநாள் பார்த்து முளைப்பாரிக்கு உள்ள நவதானியம் கடையில்கேட்டு


வாங்கி வைக்கவேண்டும். கல்யாணத்துக்கு 2 நாள் முன்பு மாலையில் காசாணித்தவலை இருந்தால் அதை சுத்தம்பண்ணி எடுத்துவைத்து பெண்கள் ஆளுக்கு இரண்டுகை தானியம் எடுத்து தவலையில் போட்டு தண்ணீர் நன்றாக ஊற்றி  வேடுகட்டி சாமிஅறையில் வைக்க வேண்டும். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டிவிட்டு வேறு தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.அன்று மாலை தண்ணீரை வடிகட்டிவிட்டு அதை சிவப்புத்துணியில் கொட்டி கட்டி ஒரு சில்வர் சட்டியில் வைக்க வேண்டும்.மறுநாள்  காலையில்பார்த்தால் சிறிது முளைகிளம்பி இருக்கும்.மறுபடி கட்டிவைத்து மாப்பிள்ளையை பெண்வீட்டுக்கு அழைத்து வரும்போது கூடவருபவர்கள் மறக்காமல் எடுத்துவர வேண்டும்.

அரிசி அளத்தலும் வேவுக்கடகாமும்!

கல்யணத்துக்கு முதல்நாள் மாலை

சாமிவீட்டுக்கு நேராக பர்மாப்பாய் விரித்து

அதில் புழுங்கல் அரிசி கொட்டி

மாப்பிள்ளைக்கு அப்பத்தாவீட்டு ஐயா 


அல்லது

வீட்டில் உள்ள பெரியவர் 

அல்லது மாப்பிள்ளையின் அப்பா

கிழக்குப்பாத்து உக்கார்ந்து

இரண்டு மரக்கால்

(அதாவது பெரியபடிக்கு இரண்டுபடி)

அளந்து ஒலைப்பெட்டி அல்லது

வேறு பாத்திரத்தில் 

அளந்து எடுக்க வேண்டும் .

பிறகு அதை இரண்டு வேவுக்கடகாத்தில்

இரண்டிரண்டு படியாக எடுத்துவைக்கவேண்டும்.

வேவுக்கடகாத்தில் இரண்டு கத்தரிக்காயும் 

பாதிமட்டை உரித்த இரண்டு தேங்காயும்

வெற்றிலைபாக்கும் வைக்கவேண்டும்.

 

Tuesday, June 18, 2024

மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தல்

 கல்யாணத்துக்கு முதல்நாள் மாலை

சாமிவீட்டுக்கு நேராக

ஒரு பர்மாப்பாய் விரித்து

அல்லது மாப்பிள்ளைக்கு

ஒரு தடுக்கு மாமக்காரருக்கு ஒரு தடுக்கு

கிழக்கு மேற்காகப் போட்டு அதில்

மாப்பிள்ளை கிழக்குப்பாக்க நிக்கணும்

மாமக்காரர் எதிர்ப்பக்கம் உக்கார்ந்து

மாமக்காரர் மாப்பிள்ளையின் காலில்

இரண்டாவது விரலில் 

வெள்ளியில் கனமாகச்செய்த

மிஞ்சியை இரண்டுகால்களிலும்

அணிவிக்க  வேண்டும் .

அப்போது சங்கு ஊதவேண்டும்..

(இந்த மிஞ்சி நமது வீடுகளில் 

நிச்சயம் இருக்கும் 

தெரிந்தவர் வீடுகளிலும் ராசிக்காக

கேட்டு வாங்கிக்கலாம்)

Sunday, June 16, 2024

தேங்காய்ச் சட்டியின் முக்கியத்துவம்

தேங்காய் இரண்டு

கொஞ்சம் மட்டைஉரித்ததாக 

விரலிமஞ்சள் இரண்டு

வெற்றிலை பாக்கு


பேசி முடித்துக்கொள்ளப்

பிறப்பிடும்போதும்

மாப்பிள்ளை அழைப்பின்போதும்

பெண் அழைப்பின்போதும்

தேங்காய்ச் சட்டி 

மாப்பிள்ளையின் தகப்பனார்

பெண்ணின் தகப்பனார்

வீட்டில் ஐயா இருந்தால் 

ஐயா  கையில்

 அவசியம்எடுத்துவரவேண்டும்

இருவருமே அவரவர் வீட்டுக்கு

பிறப்பிடும்போது மறக்காமல்

தேங்காயை சம்பந்தப்புரத்தில்

சாமி அறையில் வைத்துவிட்டு

மஞ்சளையும் வெற்றிலைபாக்கையும்

தேங்காய்ச்சட்டியுடன்

எடுத்துவரவேண்டும்

Friday, June 14, 2024

கைப்பெட்டி (மாப்பிள்ளைவீடு)

 நல்லநாள் பாத்து கைப்பெட்டியில் எடுத்துவைக்க வேண்டியவை

1)முனைமுறியாத விரலிமஞ்சள்8.

 கிளைஉள்ளதாக இருக்கட்டும்

தேங்காய்ச் சட்டியில்வைப்பது இரண்டு

திருப்பூட்டுகிற தாம்பாளத்தில்வைப்பது இரண்டு

எதற்கும் கூடவே இருக்கட்டும் என்று எடுத்துவைப்பார்கள்


2)பட்டணம் மஞ்சள் பெருசாக2கழுத்திரு கோக்க தேவை

3)கல்யாண அழைப்பிதழ்2

4)பணம் முடியற பட்டுத்துண்டு

குழவிக்கு ஒரு சின்ன பட்டுத்துண்டு

5)மொய்பபண ஏடு

6)இசைவு பிடிமான ஏடு

7)நோட்டு 2

8)வெள்ளைப்பேப்பர்

சின்னம்பெரிசா கொஞ்சம்

9)பேனா,பென்சில், ரப்பர்

10)பென்சில் திருவி,பிளேடு

11)கத்தி

12)கத்தரிக்கோல்2

13)ஏடு எழுத்தாணி

14)பின்அடிக்கும் ஸ்டாப்லர்

15ஊக்குப்பட்டை

16)ரப்பர் பேண்ட்

17)ஊசி நூல்

18)சூடப்பாக்கெட்1

19)கழுத்திரு கோக்க நூல் நூல்கண்டு (0 நம்பர்)

அல்லது தயார்செய்யப்பட்ட நூல்கயிறு

 நகைக்கடையில் கிடைக்கும் வாங்கிக்கலாம்

எதுவேணுமோ உடனே தேடாம கைப்பெட்டில இருக்குன்னு எடுத்துக்கலாம்

கழுத்திரு நாமே கோர்ப்பதானால்

பட்டணம் மஞ்சளை 

முதல் நாள் இரவே ஊறப்போடணும்

அப்பதான் நூலில் இழைக்கமுடியும்.

அன்றே கோலமாவுக்கு 

இரண்டு உளக்கு பச்சரிசி ஊறப்போட்டு

நைசாக அறைத்து தட்டிப்போட்டு

நிழல் காய்ச்சலாக ரெண்டுநாள் காயவைத்து

ஒருநாள் சிறிதுநேரம் வெய்யிலில்

காயவைத்து எடுத்து வைக்கணும்

Sunday, June 9, 2024

மாம வேவு




  




மாமன்தலைவைத்து

மகிழ்வுடனே இறக்குகின்ற 

மகத்தான வேவு!(தலப்பாகட்டி வேவுஇறக்கும் பாசத்தில் மனசுறெக்கைகட்டிப் பறக்கும்)

அரிசி பருப்புடனே அருமையுள்ள தீஞ்சாமான் 

ஆயாள்தருகின்ற அன்புக்கு விலையில்லை

ஆயாள் வீட்டுப்பங்காளிகளி ஆண்கள்

தலையில்வைத்து நம்மள்வீட்டிலுள்ள

பெண்பிள்ளைகள் மற்றும் 

ஆண்பிள்ளைகள் இறக்கி 

சாமிவீட்டில் கொண்டுவந்து வைத்து

உக்காந்து சாமிகும்பிட்டு

திருநீறு பூசிக்கொண்டு

எழுந்து வரவேண்டும்

அவரவர் வீட்டு வழக்கப்படி

ஏழு, ஒன்பது, பதினொன்று, பதினாறு,பத்தொன்பது,

இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில்

வேவு இறக்குதல்

பெரியவர்களைக் கேட்டு செய்யவேண்டும்.

Friday, May 3, 2024

கோவிலுக்கு பாக்குவைத்தல்

 கல்யாணம் சொல்லியதும்

பங்காளி வீட்டில்

(அல்லது நம்மவீட்டில்)யாராவது

நம்ம ஒன்பதுகோவிலில்

எந்தக்கோவில் நமதுபிரிவோ

அந்தக் கோவிலுக்கு போய்

பாக்குவைத்து 

கல்யாண அழைப்பிதழும்வைத்து

கோவில்மாலை கொண்டுவர

பணம்கட்டி வரவேண்டும்.


கல்யாணம்சொல்லுதல்

 முகூர்த்தக்கால் ஊன்றியதும்

முக்கியமாய் வீட்டுக்குள்

ஓலைத் தடுக்கினிலே

ஓவியமாய் உக்காந்து

தலப்பா கட்டிக்கிட்டு

தேங்காய்ச்சட்டியில்
மட்டை கொஞ்சமாக
உரித்த இரண்டு தேங்காய்
வெற்றிலைபாக்கு வைத்து
அழைப்பிதழும் வைத்து
அவரவர் வழக்கப்படி
பணம் வைத்து முதலில்
பேழைக்கும் பெரியவீட்டுக்கும் 
சொல்லவேண்டும்.



(வாளிக்குள் பணம் அவரவர்

வீட்டு வழக்கப்படி வைத்து)

 வெற்றிலையும் பாக்குவைத்து

வீட்டிலுள்ள பெரியவர்க்கும்

அண்ணன் தம்பிக்கும்

அழைப்புவைத்துக் கூப்பிட்டு 

ஆயாள் வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும்

அதுபோலக் கூப்பிடணும்!



அன்றே சிலேட்டுவிளக்கை எடுத்து

ஏற்றிப்பார்த்து  தயார்செய்து வைக்கணும்

(பாசி பின்னிய சிலேட்டு விளக்கு!
ஆச்சிகள் கைவண்ணம் காட்டும் விளக்கு!!
நல்ல நாளெல்லாம் ஏற்றும் விளக்கு!!!
நம் பாரம்பரியம் காக்கும் விளக்கு!!!!}

அந்தக்காலத்துல

முகூர்த்தக்கால் ஊன்றியதும்

அந்தவீதியில் உள்ள 

வீடுகளுக்குமுன்பாகச்சென்று

கல்யாணத்துக்கு வாங்கன்னு

கல்யாணஞ்சொல்றது வழக்கம்)


முகூர்த்தக்கால் நடுதல்

ஐயாவும் அப்பத்தாவும்

மெய்யான அன்புடனே 

செய்.கின்ற வெலையெல்லாம்

செம்மையுறச் செய்வதற்கு 

கையேடு வாங்கிவந்து

கச்சிதமாய் எழுதிவைத்து

ஐயா ஆயா அம்மானுக்கும்

அன்புடனே அழைப்புவைத்து

அத்தை அம்மானை

அருமையுடன் வரச்சொல்லி

கொட்டகைக்காரருக்கும்

குறிப்பெழுதிக்கொடுத்து

கொண்டுவந்த சாமானை

சரிபாத்து எடுத்துவைத்து

வீட்டுக்குள் அப்பத்தா 

முன்னோடி கருப்பருக்கு

முறையாகக் காசுவச்சு

விளகேற்றி வைத்துவர

 அத்தைசங்கை அழகாகஊதிவர

அப்பாவும் அம்மாவும்

 அருகிருந்து உதவிசெய்ய

சுற்றமெல்லாம் சூழ்ந்திருக்க

குலதெய்வம் துணையிருக்க

மூங்கில்போல் தழைத்து

முன்னேற வேண்டுமென

மாங்குழையும் கதம்பமும்

பாங்குறவே கட்டிவைத்து

முதியவரும் இளையோரும்


மஞ்சளும் குங்குமமும்


மகிழ்வுடனே இட்டுவைத்து

முகூர்த்தக் கால்ஊன்ற! 

கல்யாணவீடு களைகட்டும்!!

கண்கொள்ளாக் காட்சியப்பா!!!

(முகூர்த்தக்கால் வளவின்

ஈசானியமூலையில் ஊன்றி

அதனடியில் பால் ஊற்றி

மலர்களை இடவேண்டும்)


Thursday, April 18, 2024

கூடிஆக்கி உண்ணுதல்

மூணுநாட்கள் முன்னாலே 

பேணுகின்ற சொந்தங்கள்

 காணவந்து கையுதவி!!


 ஆனந்தக் களிப்புடனே 

ஓடிஆடி வேலைசெய்ய! 


உறவுகளை ஒன்றுசேர்க்கும் 

கூடிஆக்கி உண்ணுகின்ற

கோலாகல நிகழ்ச்சியது !!! 

     விதைப்பு கொடுப்பது

(கூடிஆக்கி உண்ணும்அன்று

 அவரவர் ஊர் வழக்கப்படி

கோவிலுக்கு விதைப்புநெல்

கொடுக்க வேண்டும்)

காரைக்குடியில்

கொப்பாத்தா கோவிலுக்கு

சின்னப்படிக்கு ஒருபடியும்

ஐயனார் கோவிலுக்கு

சின்னப்படிக்கு ஒருபடியும்

கொடுப்பது வழக்கம்

படைப்பு வைத்திருந்தால்

அதற்கும் இதேமாதிரி

கொடுக்க வேண்டும்.

Saturday, February 17, 2024

நகரத்தார் பெண்பார்க்கும் நிகழ்வு

முகப்பைத் திறந்துவைத்து

முகம்மலரக் காத்திருந்து

அகங்குளிர வரவேற்று அன்போடு உபசரித்து

பெரியவர்க்கு மதிப்பளித்துப் 

பிரியமுடன் அப்பத்தா 

ரெண்டாங்கட்டிருந்து

முகப்புவரை நடக்கவைத்து

(பண்ணின் நடையழகைப் பார்ப்பதற்கு)

பெண்ணை அழைத்துவர

அரியதொரு காட்சிஇது

பேரன்பின் மாட்சிஇது!

மாப்பிள்ளை கடைக்கண்ணால் 
மங்கைதனைப் பார்த்திடுவார்!
மங்கையும் அதுபோல 
மகிழ்ச்சியுடன் கடைக்கண்ணால்
நெகிழ்வோடு பார்த்திருப்பாள்!

இருபக்கம் பெரியவர்கள்
இனிமையுடன்பேசி 
விருப்பங்கள் கேட்டு
விழிப்போடு மனதறிந்து
விரைவாக முடிவடுப்பார்!
திருமணநாள்தன்னை 
இருவருக்கும் தோதாக
ஒருமனதாய் முடிவடுப்பார்! 
உள்ள நிறைவோடு!!

அரியசில காட்சிள்
தெரியவரும் மற்றவர்க்கு
செட்டிநாட்டுத் திருமணத்தில்!
Related Posts Plugin for WordPress, Blogger...