பெரியவீட்ட விட்டுப்பிட்டு
சின்னவீட்டுக்கு வந்ததால
உரிமையான உறவெல்லாம்
தெரியாமேப்போச்சுதுங்க
கூட்டுக் குடும்பத்துல
காட்டிவச்ச சமத்தெல்லாம்
போட்டி பொறாமையால
ஏட்டிக்கிப் போட்டிபேசி
எட்டாமப் போச்சுதுங்க--ஒறவு
ஒட்டாமப்போச்சுதுங்க
விட்டுக்குடுத்துப் போனவங்க
கெட்டுப்போன தில்லேங்க
விட்டுக்குடுத்துப் போனாக்க
எட்டாத ஒறவெல்லாம்
கிட்டவந்து சேருமுங்க
கிட்டிவரும் நன்மைங்க
சொந்தமெல்லாம் ஒண்ணுகூடி
சேந்துவந்து குடும்பத்துல
பந்தாவக் காட்டாம
பாந்துவமா நடந்துக்கிட்டு
சிந்தனையச் செயலாக்கி
நெஞ்சமெல்லாம் மகிழ்ந்திருப்போம்!
வேத்துமைய மறந்துப்புட்டு
ஒத்துமையா வாழணுங்க!
வாங்க வாங்க எல்லாரும்
வளமையான வாழ்க்கைவாழ!
என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!
சின்னவீட்டுக்கு வந்ததால
உரிமையான உறவெல்லாம்
தெரியாமேப்போச்சுதுங்க
கூட்டுக் குடும்பத்துல
காட்டிவச்ச சமத்தெல்லாம்
போட்டி பொறாமையால
ஏட்டிக்கிப் போட்டிபேசி
எட்டாமப் போச்சுதுங்க--ஒறவு
ஒட்டாமப்போச்சுதுங்க
விட்டுக்குடுத்துப் போனவங்க
கெட்டுப்போன தில்லேங்க
விட்டுக்குடுத்துப் போனாக்க
எட்டாத ஒறவெல்லாம்
கிட்டவந்து சேருமுங்க
கிட்டிவரும் நன்மைங்க
சொந்தமெல்லாம் ஒண்ணுகூடி
சேந்துவந்து குடும்பத்துல
பந்தாவக் காட்டாம
பாந்துவமா நடந்துக்கிட்டு
சிந்தனையச் செயலாக்கி
நெஞ்சமெல்லாம் மகிழ்ந்திருப்போம்!
வேத்துமைய மறந்துப்புட்டு
ஒத்துமையா வாழணுங்க!
வாங்க வாங்க எல்லாரும்
வளமையான வாழ்க்கைவாழ!
என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!