முகப்பைத் திறந்துவைத்து
முகம்மலரக் காத்திருந்து
அகங்குளிர வரவேற்று அன்போடு உபசரித்து
பெரியவர்க்கு மதிப்பளித்துப்
பிரியமுடன் அப்பத்தா
ரெண்டாங்கட்டிருந்து
முகப்புவரை நடக்கவைத்து
(பண்ணின் நடையழகைப் பார்ப்பதற்கு)
பெண்ணை அழைத்துவர
அரியதொரு காட்சிஇது
பேரன்பின் மாட்சிஇது!
மாப்பிள்ளை கடைக்கண்ணால்
மங்கைதனைப் பார்த்திடுவார்!
மங்கையும் அதுபோல
மகிழ்ச்சியுடன் கடைக்கண்ணால்
நெகிழ்வோடு பார்த்திருப்பாள்!
இருபக்கம் பெரியவர்கள்
இனிமையுடன்பேசி
விருப்பங்கள் கேட்டு
விழிப்போடு மனதறிந்து
விரைவாக முடிவடுப்பார்!
திருமணநாள்தன்னை
இருவருக்கும் தோதாக
ஒருமனதாய் முடிவடுப்பார்!
உள்ள நிறைவோடு!!
அரியசில காட்சிள்
தெரியவரும் மற்றவர்க்கு
செட்டிநாட்டுத் திருமணத்தில்!