Sunday, June 23, 2024

பெண்பார்க்கும் நிகழ்வுக்குமுன் அப்பத்தா சொல்லிக்கொடுத்தது

     அலமியாச்சிக்கு பேத்திக்கு சீக்கிரமா கலியாணம் பண்ணிப்பாக்க ஆசை.
பேத்திக்குப் படிப்புமுடிய இன்னும் ஒருவருசம் இருக்கே ஆத்தா
அதுக்குள்ள என்ன அவசரம் என்று மகன்சொல்ல,பேத்திக்கோ
தனது பொறியியல் படிப்பைமுடித்து கொஞ்சநாள் வேலைக்கும்
சென்றுவர ஆசை.
    இப்பவேபேச ஆரம்பிச்சாதான் அப்பச்சி படிப்புமுடிஞ்சதும்
செய்யத் தோதாகஇருக்கும் என்று அப்பத்தா சொன்னதும்பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்புக்கொடுக்கும்அந்தக்குடும்பத்தில் அப்பத்தா சொன்னதைக்கேட்டார்கள்.தெரிஞ்சவுகளிடம் சொல்லிவைத்தார்கள்.
   படிப்புமுடிய ஆறுமாதம் இருக்கும்போது நல்லபேச்சாக மாப்பிள்ளையும்
பொறியியலாளராக அரசாங்கவேலையிலிருப்பவராக நல்ல இடமாக அமைந்தது.நல்லநாள் பார்த்து பெண்பார்க்க வருவதாகச்சொல்லிவிட்டார்கள்.

     அலமிஆச்சிக்கு ரொம்ப மகிழ்ச்சி.மகன் சொக்கலிங்கத்தையும் மருமகள்
மீனாட்சியையும் கூப்பிட்டுப் பக்கத்தில்வைத்துக்கொண்டு மாப்பிள்ளைவீடு
வருவதற்குமுன்னால் தயார்செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிக்கொடுத்தார்கள்.
    மாப்பிள்ளை பெண்பார்க்க வருவதற்கு பலகாரங்கள் செய்வது நம்வீட்டில்
வழக்கமில்லை.அதனால் கடையில் சோன்பப்டியும் மிக்சரும் அதை வைத்துக்கொடுப்பதற்கு பிளேட்டுகளும்,காப்பி,பால் முதலானவைகளும்
மாப்பிள்ளை வீட்டிலிருந்து எத்தனபேர் வருகிறார்கள் என்றுகேட்டு அதற்குத்தகுந்தாற்போல ஏற்பாடுசெய்து முன்கூட்டியே வாங்கி
வைக்கச் சொன்னார்கள்

    பெண்னுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்து  நல்ல மனிதர்களாக அமைந்தால் அவர்கள் சொல்லிக்கொள்ளும்போது கொடுப்பதற்கு எவர்சில்வர்வாளி,பழங்கள்,ரொட்டிக்கட்டு முதலானவை வாங்கிவைக்கவேண்டுமென்றார்கள்.
மாபிள்ளைக்கு பெண்பார்த்ததற்கு நாம் பேசிக்கொள்ளும் முறைகளுக்கு
ஏற்றார்ப்போல ரூபாயுடன் வெற்றிலைபாக்கும் வகைப்பழம் அதாவது
வாழைப்பழம் ஒருசீப்புடன் சாத்துக்குடி அல்லது ஆப்பிள் ஆரஞ்சு
இவற்றில் ஏதாவது இரண்டுவைத்துக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
மாப்பிள்ளையின் தயார் தகப்பனார் இருவருக்கும் கொழுதனார் நாத்தனார்
இருந்தால் அவர்களுக்கும் அதுபோல் பழம்வைத்து மாப்பிள்ளைக்கு
வைத்ததுபோல[அதாவது மாப்பிள்ளைக்கு ரூ- 501/என்றால் மப்பிள்ளையின்
அப்பா+அம்மாவுக்கு-201+201ம் கொழுதனார் நாத்தனார்க்கு-ரூ-101+101ம்]
வைத்துக்கொடுப்பது என்றுமுடிவுசெய்து எல்லாம் எடுத்துவைத்தார்கள்
பெண்பார்க்க நம்வீட்டுக்கு வருபவர்களை 
சும்மா அனுப்பக்கூடாது மரியதைக்காக செய்வது
அவரவர் வழக்கப்படி துகை[ரூபாய்] வைக்கலாம்.

https://muthusabarathinam.blogspot.com/2024/02/blog-post.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...