பச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து
பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய்!
பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல்,
கல்லூரி சென்றபின் கல்வியுடன் கவிதையும்,
போட்டிகளில் கலந்துகொண்டால் பொதுவாக முதல்பரிசு,
வீட்டுக்கு வந்துவிட்டால் வண்ணங்கள் தீட்டுதல்,
திருமணத்தின்பின் வாழ்வின் இலக்கணமாய் இருக்கின்றாய்.
கோவையிலும் சென்னையிலும் குழந்தைகளே உலகமாய்,
டெல்லியிலே இருக்கையிலோ உல்லனிலே வகைவகையாய்,
சிதம்பரத்தில் இருக்கையிலே சிவனவனே சீவனாய்,
நெய்வேலி இருக்கையிலே கைவேலை கவினழகாய்,
சேலத்தில் இருக்கையிலே சிங்கார வீடழகாய்,
காரையில் உன்வீடு கவினுறவே தோட்டமிட்டு,
காய்கீரை பூச்செடியும் கனிமரங்கள் தான்வளர்த்தாய்,
மீண்டும்நீ சென்னையில் மீண்டுமுன்னைப் புதுப்பித்து,
வாழ்கின்ற வசந்தத்தில் வரவேண்டும் பேரமிண்டி!
6 comments:
அம்மா, நெகிழ வைத்து விட்டீர்கள்.... அருமை.... !
எழுதியிருக்கும் எல்லாவற்றையும் ஆமோதிக்கிறேன். நல்ல பேரமிண்டியும் வரட்டும்!
அம்மாவின் அருமையை அழகாய் கூறியுள்ளீர்கள். அருமை
அருமை ..மகளைப் பற்றிய அம்மாவின் பதிவு வாழ்த்துகள் அம்மா
அருமை அருமை
அஹா !
Post a Comment