Thursday, December 2, 2010

தொடர்ச்சி

.ஒப்பற்ற மெய்யப்பர் உயர்வான கவனிப்பில்
எப்போதும் சுறுசுறுப்பே இயல்பான அப்பச்சி
எட்டாவது படிக்கையிலே எழில்ரங்கூனில் இருந்து
சிட்டாகப் பறந்துவந்த சிறுதந்தி படித்ததனால்
மெய்யப்ப பாட்டைய்யா மிகமகிழ்ச்சி தானடைந்து
மெய்யான படிப்பிதுவே! மேற்படிப்பு போதுமென்று
ஏட்டுப் படிப்பதனை எட்டோடு நிறுத்திவிட்டு
வட்டித் தொழில்தன்னை வளமாகக் கற்பித்தார்.
தலைமுறைகள் தழைக்கவந்த தாய்மூவர்க் கொருமகனார்
அலைகடலுக் கப்பாலே அறம்பெருக வித்திட்டார்!
விலையுண்டோ இளமையிலே தனிமைமிகக் கொண்டதற்கு!?
ரங்கூனில் கொண்டுவிக்க ராப்பகலாய் மொழிகற்று
மலாயாவில் கொண்டுவிக்க மலாய்மொழியும் தான்கற்றார்!
என்றைக்கும் கற்பதற்கு ஏற்றதொரு நூலகமாய்!
இன்றைக்கும்திகழ்கின்றார் எங்களது அப்பச்சி!!
                                                                     
                                                                       வளரும்..
.
அப்பச்சி { பொருள் } -அப்பா.              


கொண்டுவிக்க { இதற்குப்பொருள் சுருக்கமாகச் சொன்னால் செட்டியார்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று பணம் மற்றும்பொருளீட்டி வருதல் }

























































































































2 comments:

Chitra said...

விளக்கங்களுடன், அருமையாக எழுதி இருக்கீங்க, அம்மா.

Ramanathan SP.V. said...

தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது ஹிந்தியிலும், மலாயிலும் அந்தந்த உரு எழுத்துக்களிலேயே எழுதவும் படிக்கவும் செய்தார்கள். மலையாளம் எழுதப் படித்தபோது 87 வயது. Learn Malayaalam in 30 days ஐ பார்த்து எழுதப் பழகிக் கொண்டிருந்தார்கள்.நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். "இந்த Asianet ல நல்ல கர்னாடக சங்கீத நிகழ்ச்சி போடுகிறார்கள். பேர், ராகம் எல்லாத்தையும் மலையாளத்துல போடுகிறார்கள், அதான்" என்றார்கள்!We miss you. We are gifted to be your children, dad!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...