Saturday, October 16, 2010

எங்கள் குலதெய்வம் ஆதினமிளகி அய்யனார்

ஆதீனமிளகி அய்யன் அடிபணிந்து ஏத்திவந்தால்
கோதிலாக் குலம்தழைக்கக் கொடுத்தருள் புரிவான்காணீர்

வில்வமர வனந்தனிலே வீற்றிருக்கும் அய்யனாரை
தெள்ளுதமி ழால்பாடித் தினந்தோறும் வணங்கிவந்தால்
வள்ளுவனும் வாசுகிபோல் வளமோடு வாழ்ந்திடலாம்
உள்ளமெல்லாம் மகிழ்வடைய உயர்பதவி பெற்றிடலாம்!  [ஆதீனமிளகி]

துள்ளிவிளை யாடிவரும் துடிப்பான மழலை தந்து
புள்ளியெல்லாம் பெருகிவரப் புகழ்மிகவே தந்திடுவார்
அள்ள அள்ளக் குறையாத அன்னமென்றும் விளைந்திருக்கும்
இல்லமெல்லாம் நிறைந்திருக்கும் இனியபொருள் நிலைத்திருக்கும்![ஆதீன]

நாடிவரும் நகரத்தார் நன்மையெல்லாம் பெற்றுயர 
தேடிவரும்செல்வமெல்லாம் செழித்தோங்கச் செய்திடுவார்!
கூடிவந்து மக்களெல்லாம் கொண்டாடி வணங்கிவந்தால்
கோடிபெறும் நன்மையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தருள்வார்!-[ஆதீனமிளகி]

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

தினேஷ்குமார் said...

எங்க குலதெய்வமும் ஐயனார் அப்பன்தான்

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

ஆச்சி,
கவிதை கண் கலங்க வைத்தது!
நன்றி,
தேன் பாரி

Unknown said...

ஆச்சி,
கவிதை கண் கலங்க வைத்தது.
நன்றி,
தேன் பாரி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...