ஏற்றங்கள் தருவாய் முருகையா
பார்வதி மகனே முருகையா!
பக்தரின் துணையே
முருகைய்யா!
கார்மழை போலுன் கருணையினால்
சேர்வது நலமே முருகையா!
பார்புகழ் பெயரே முருகையா!
பார்க்கவி மருகா முருகையா!
ஆர்த்தெழும் கருணைக் கடலன்பால்
சேர்த்தெமை இணைப்பாய் முருகைய்யா!
வார்த்திடும் கனக வடிவழகே
பார்த்ததும் மகிழ்வு பெருகுதையா!
கார்த்திகை மகளிர் கரங்களிலே
சேர்த்தணை சிறுவா முருகையா!
மார்க்கம் காட்டும் மன்னவனே
வார்கடல் அமுதே முருகைய்யா!
ஆர்க்கும் கடலின் ஆரமுதே
பேர்த்தும் அன்பால் பிணைந்தோமே!
சேர்ந்திடும் உறவு செம்மையுற
சிக்கெனப் பாதம் பற்றினமே!
நேர்ந்திடும் கடனை நிறைவேற்ற
ஏற்றங்கள் தருவாய் முருகைய்யா!
No comments:
Post a Comment