ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
கருவிலே உருவான கனிதமிழ்ப் பாட்டிது
கண்ணாத்தா உந்தனருளே!
வருவாய்நீ வாழ்க்கையில் வசந்தங்கள் பெருகிட
வாழ்த்தியே அருள்புரிவாய்!
கண்மலர் சாத்தினால் கனிவோடு பார்த்துநீ
கண்நோயைத் தீர்த்தருள்வாய்!
கண்மணியைக் காத்தருள் புரிவதால் தான்உனை
கண்ணாத்தா என்றுசொல்வார்!
கண்ணிலே மாவிளக்கு வைத்துனை வணங்கிட
கவலையைத் தீர்த்தருள்வாய்!
கண்ணுக்குக் கண்ணாகக் கருவிலே குழந்தையைக்
களிப்போடு தந்தருள்வாய்!
பாட்டரசன் பாட்டுக்குப் படியெடுத்துக் கொடுத்துநீ
பாரெல்லாம் புகழவைத்தாய்
நாட்டரசன் கோட்டைவளர் நாயகியே உன்புகழ்
நாவினால் சொல்லலரிதே! ----ஓம்சக்தி
1 comment:
அம்மா, இந்த பக்தி பாமாலைகளை தொகுத்து, புத்தகமாக கண்டிப்பாக போட வேண்டும். அருமையாக இருக்கிறது.
Post a Comment