Sunday, February 6, 2011

காரைக்குடி நகரச்சிவன்கோவில் மீனாட்சி அம்மன்.

           ஒம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
           ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

தேனாட்சி செய்கின்ற தென்தமிழ்ப் பாட்டினால்
                   தேவியுனைப் பாடிவரவே
மானாட்சி செய்கின்ற மைவிழிக் கருணையே
                 மகிழ்வோடு வரம்தருவாய்!
மீனட்சி உன்முகம் மின்னுகிற அழகிலே
               மெய்மறந்து உருகிநின்றோம்!
தேனோடு பாலுமே தினம்சிவனுக்[கு] அபிஷேகம்
                தித்திக்கும் காட்சியம்மா!
மீனாட்சி மீனாட்சி மீனாட்சி என்றுன்னை
              மிகவேண்டி வந்துநின்றால்
நானாச்சு என்றுநீ நன்மைகள் செய்கிறாய்
             நற்பேறு பெறுகிறோமே!
ஆனைமுகன் உன்மகன் அழகான முகம்பார்த்து
             அமைதியே வடிவாகினாய்!
தேனான திருப்புகழ்த் திருமுருகன் தனைக்கண்டு
              அன்பிலே மகிழ்வாகினாய்!
வானோங்கு புகழ்மிக்க வளர்காரை நகரத்தார்
            வடித்திட்ட கோவிலழகே!
தானோங்கு தமிழ்தந்து தரணியில் உயர்த்தினாய்
             தாயேமீ னாட்சிஉமையே!

     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்
     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்

1 comment:

Chitra said...

அம்மா.... நல்லா எழுதி இருக்கீங்க... மீண்டும் சொல்றேன்மா.... தேன் அக்காகிட்ட சொல்லி, பாமாலை தொகுப்பு புத்தகமாக போடுங்க, அம்மா....
4

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...