Tuesday, April 5, 2011

என்ன வேண்டும்? எழுந்துவா...

என்னவேண்டும்?
எழுந்துவா..

மற்றவர் மனம்
பாதிக் காத

மாற்றம் உள்ளதில்
மனதைச் செலுத்து

ஏற்றம் உள்ளதாய்
எடுத்து யோசி

கொஞ்சம் கொஞ்சமாய்
முயன்று யோசி

நெஞ்சில் உறுதியாய்
நின்று யாசி

நினைவின் வழியில்
நீயும் உழைத்தால்

அனத்தும் நன்றாய்
நினைத்தது நடக்கும்!

வானும் மண்ணும்
வளமாய் வசப்படும்!!

என்ன வேண்டும்?
எழுந்துவா
எல்லாம் கிடைக்கும்!

3 comments:

Chitra said...

சிந்தித்து செயல்பட அறிவுறுத்தும் நல்ல கவிதை. பாராட்டுக்கள், அம்மா!

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை அம்மா.
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

நல்ல கவிதை ..:)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...