கொப்பை உடைய அம்மையே - போற்றி
ஒப்பில் லாத உயர்வே- போற்றிசெப்பரிய அழகு உருவே - போற்றி
தப்பில்லா வாழ்வு தருவாய்- போற்றி
அப்பழுக் கில்லா அருளே - போற்றி
எப்பொழுதும் என்னகம் உறைவாய் - போற்றிவெப்பொழி வேத வல்லியே - போற்றி
அப்பனும் அம்மையும் ஆனாய் - போற்றி
நகரின் நடுநிலை நாயகி - போற்றி
நிகரில் லாதவள் நீயே - போற்றி
நிகழும் நல்லதில் நிற்பாய் - போற்றி
நெகிழும் உள்ளம் நிறைப்பாய் - போற்றி
வளரும் பயிரின் வளனே - போற்றி
உலவும் காற்றின் உயிரே - போற்றி
உயிரே உயிரின் உணர்வே - போற்றி
உயரிய சிந்தனை உவப்பாய் - போற்றி
வயிரம் இழைத்த வடிவே - போற்றி
பயிர்கள் காக்கும் பகவதி - போற்றி
கண்ணில் மின்னும் கனிவே - போற்றி
பெண்ணில் நல்ல பெருந்தகை - போற்றி
எண்குணன் துணைவி எந்தாய் - போற்றி
திண்ணம் தருவாய் திரிபுரை - போற்றி -----[வலிமை]
எண்ணம் நல்லன ஏற்பாய் - போற்றி
தன்னம் பிக்கை தருவாய் - போற்றி
பொன்னே மணியே புகழே - போற்றி
என்னை இயக்கும் எழிலே - போற்றி
அன்னை என்பார்[க்கு] அன்ன - போற்றி------[அவ்வண்ணமே]
முன்னைத் தவத்தின் முகிழ்வே - போற்றி
தன்னை உணர்த்தும் தண்ணருள் - போற்றி
உன்னை அறிய உவந்தாய் - போற்றி
புன்னகை மலர்ந்த புவனி - போற்றி
பொன்நகை புனைந்த பூரணி - போற்றி
தன்னே ரில்லாத் தமிழே - போற்றி
தென்னா டுடைய சிவனதுணை - போற்றி
நிலையாம் நட்பைத் தருவாய் - போற்றி
கலைகள் அருளும் கலைமகள் - போற்றி
வைகறை அழகே வாக்கியை - போற்றி.- [பார்வதி]
பொய்கை நிறைந்த பூவே - போற்றி
முந்தை வினைகள் முடிப்பாய் - போற்றி
சிந்தை மகிழும் சீதம் - போற்றி - [குளிர்ச்சி]
செந்தா மரையின் செல்வி - போற்றி
நந்தா விளக்கே நாரணி - போற்றி
சொந்தம் பெருக்கும்சுரபி - போற்றி
பந்தம் அகற்றும் பாரதி - போற்றி
சங்கம் முழங்கவரும் சங்கரி - போற்றி
செங்கை நிறைந்த செறுவே - போற்றி - [வயல்]
சங்கத் தமிழே சரஸ்வதி - போற்றி
சிங்கத் தமர்ந்த சிகரம் - போற்றி
காரை நகரின் கண்ணே - போற்றி
பேரருள் பிறங்கும் பிராட்டி - போற்றி
ஊரின் நலமே உயர்வே - போற்றி
வாரி வழங்கும் வைஷ்ணவி - போற்றி
தேரில் அமர்ந்த திருவே - போற்றி
பாரில் உயர்ந்த பண்பே - போற்றி
போர்க்குணம் ஒழிக்கும் பொன்னே - போற்றி
பேர்க்கும் அன்பில் பிணைந்தாய் - போற்றி
ஆர்க்கும் மனதை அடக்குவாய் - போற்றி
சேர்க்கும் இடத்தில் சேர்ப்பாய் - போற்றி
பூக்கும் புதினத் தமிழே - போற்றி
வாக்கில் வண்மை தருவாய் - போற்றி
வைகசி விழாவின் வராகி - போற்றி
கைராசி அருளும் கற்பகம் - போற்றி
அம்பாரி அமர்ந்த அகிலம் - போற்றி
மும்மாரி பொழியும் முகிலே - போற்றி
கற்பூர வல்லி கல்யாணி - போற்றி
சிற்பர மான ஸ்ரீதேவி - போற்றி
நற்பதம் அருள்வாய் நந்தினி - போற்றி
சொற்பதங் கடந்தசொரூபி - போற்றி
பொற்றா மரையின் புலனே - போற்றி - [காட்சி]
கற்றார் காமுறும் கழலே - போற்றி
துணிவே துணிவின் துணையே - போற்றி
பிணிகள் அகற்றும் பிங்கலை - போற்றி - [பார்வதி]
அணியே அணியின் அழகே - போற்றி
மணியே மணியின் ஒலியே - போற்றி
வணிகர் போற்றும் வரவே - போற்றி
பணிகள் சிறக்கப் பரவுவாய் - போற்றி
பிறைசூ டியவன் பெருந்துணை - போற்றி
நரைதிரை காணா நல்லறம் - போற்றி
கொட்டிக் கொடுக்கும் கோமதி - போற்றி
கட்டும் அன்பில் கனிவாய் - போற்றி
சுட்டியில் ஒளிரும்சுந்தரி - போற்றி
மெட்டி ஒலியில் மிளிர்வாய் - போற்றி
முத்தமிழ்ச் சுடரே முழுமதி - போற்றி
சக்தி உபாசகர் சரணே - போற்றி
கானக் குயிலின் கவியே - போற்றி
ஞானக் குழலின் நாதம் - போற்றி
நெஞ்சம் நிறைந்த நீயம் - போற்றி-------[ஒளி]
அஞ்செழுத் தமர்ந்த அஞ்சுகம் - போற்றி
விஞ்சும் புகழின் விளக்கம் - போற்றி
கொஞ்சும் தமிழில் குழைவாய் - போற்றி
சிலம்பணி பாதம் சீந்தினம் - போற்றி--------[ஏந்தினோம்]
நலம்பல நல்கும் நாமகள் - போற்றி
வெள்ளி முளைத்த விடியல் - போற்றி
அள்ளிக் குவிக்கும் அடிசில் - போற்றி
விளையும் பயிரின் வித்தே - போற்றி
வளைக்கரம் வாழ்த்த வருவாய் - போற்றி
ஆதி மூலன் அன்னை - போற்றி
சோதி நிறைந்த சுடரே - போற்றி
தேசம் போற்றும் தென்றல் - போற்றி
பாசுரம் பாடப் பணித்தாய் - போற்றி
வாசித் தவர்க்கு வரமே - போற்றி
பூசித் தவர்க்குப் பூணே - போற்றி
இல்லை யென்னா இயற்கை - போற்றி
கல்லும் கனியும் கருணை - போற்றி
துதிப்போர்க் கருளும் துணையே - போற்றி
கதிநலம் காட்டுவாய் போற்றி - போற்றி
வாழும் வாழ்வின் வளனே - போற்றி
நாளும் காப்பாய் போற்றி - போற்றி
2 comments:
வணக்கங்கள், அம்மா... உங்களுக்குள் இருக்கும் திறமையை ரசிக்கிறேன். :-)
மிக அருமை..:))
Post a Comment