Tuesday, December 14, 2010

பாரம் சுமக்கப் பழகும் பசுந்தளிர்கள்

நெடுமால்திருமருகா
நித்தநித்தம் இந்த[அ]ளவா!?
பாடுபட்டுச் சுமக்கின்ற
பசுந்தளிர்கள் பாவமன்றோ?
நாட்டுபுகழ்க் கல்வியினை
நலமுறவே கற்பதற்கு
ஏட்டில் படித்த நாங்கள்
இந்த[அ]ளவு சுமக்கலையே
ஏந்திச் சுமந்துபட்டால்
எளிதாகும் வாழ்க்கையென
நீந்திக் கடப்பதற்கு
நிகழ்காலப் பழகுதலோ?
முதுகில் சுமந்துவந்து
முழுமையுறக் கற்றதனால்
எளிதாக அறிவதற்கு
ஏற்றதொரு நூலகமாய்
புதுயுகப் புத்தகத்தைப்
புதுமையுறக் கண்டனரோ!?
                                                                                                                                                                                                            

2 comments:

Chitra said...

சரியானே கேள்வி, அம்மா! பாவம்தான்.

Ramanathan SP.V. said...

எளிதாகச் சுமப்பத்ற்கும்தான் புதுயுகப்புத்தகம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...